10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து மாடியிலிருந்து வீசி கொன்ற கொடூரம்!

சென்னையில் மதுரவாயல் கேட்டுக்குப்பத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். சிறுமியை 2வது மாடியிலிருந்து வீசிக்கொன்றதாக சுரேஷ்(29) என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை மதுரவாயல் எம்எம்டிஏ காலனியில் வசிக்கும் இந்த குடும்பத்தை சேர்ந்த 10 வயது சிறுமி நேற்று இரவு சிறுநீர் கழிப்பதற்காக வெளியே சென்றுள்ளார்.

அப்போது அந்த பகுதியில் வசித்து வந்த சுரேஷ் என்ற இளைஞர் அச்சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் சிறுமி கத்தியதை பார்த்து பயந்துபோன அந்த கொடூரன் சிறுமியின் உடலை 3வது மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்துள்ளார்.

வீட்டின் அருகே தேடும் போது, பின்புறம் அந்த சிறுமி பலத்த காயங்களுடன் கிடந்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர், சிறுமியை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால், வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதனை அடுத்து, சிறுமியின் வீட்டின் மாடியில் குடியிருந்த சுரேஷ் என்ற 29 வயது இளைஞர் மீது சந்தேகம் எழ, அவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், கத்தியதால் மாடியில் இருந்து தூக்கி வீசியதாகவும் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார் எனவும் திருமணமாகி மனைவியைய் பிரிந்து வாழ்கிறார் என்றும் தெரியவந்துள்ளது. தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு எதுவும் தெரியாதது போல் இருந்த சென்ட்ரிங் தொழிலாளியான சுரேஷை கைது செய்து மதுரவாயல் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tag: , , , , , , , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published.