Thursday, September 10, 2026
ENTERTAINMENTLatest

ரஜினி 168 படத்தில் வக்கீலாக நயன்தாரா!

ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 168 படத்தில் நடிகை நயன்தாரவின் கதாப்பாத்திரன் என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது. தர்பார் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தனது 168வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் தகவலின் படி நயன்தாரா, இந்தப் படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிப்பாரேயானால் இது அவர் முதல்முறையாக நடிக்கும் கேரக்டராக அமையும்.

முன்னதாக நடிகை கீர்த்தி சுரேஷ் ரஜினிகாந்துக்கு தங்கையாக நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.


Comments are closed.