10 ரூபாயில் சென்னையை சுற்றிப் பார்க்கலாம்!
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மக்களிடையே சுற்றுலாவை பிரபலபடுத்தும் நோக்கத்துடனும் ரூ.10 கட்டணத்தில் சென்னை நகர சுற்றுலா (எங்கும் ஏறலாம் எங்கும் இறங்கலாம்) புத்ததாண்டு அன்று ஒரு நாள் மட்டும் (1.1.2020) அன்று சிறப்பு சுற்றுலாவை அறிமுகப்படுத்தி உள்ளது.
புத்தாண்டு தினமான ஜனவரி 1 அன்று திருவல்லிக்கேணி சுற்றுலாக்கழக அலுவலக வளாகத்தில் இருந்து பேருந்துகள் புறப்படும்.
சுற்றுலாப் பொருட்காட்சி (தீவுத்திடல்) தொடங்கி மெரினா கடற்கரை, விவேகானந்தர் இல்லம், கலங்கரை விளக்கம், பெசண்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி பேரலாயம், அஷ்டலட்சுமி கோயில், அறுபடை முருகன் கோயில், கிண்டி குழந்தைகள் பூங்கா ஆகிய இடங்களுக்கு சென்று திரும்பும் வகையில் சுற்றுலா மேற்கொள்ளலாம்.
சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான 15 பேருந்துகள் இதற்காக இயக்கப்பட உள்ளது. அந்த பேருந்துகள் காலை 9 மணியில் இருந்து மாலை 6 மணிவரை இயக்கப்படுகிறது. இதற்கு ரூ.10 கட்டணம் ஒருவருக்கு வசூலிக்கப்படுகிறது.
சுற்றுலா பயணிகள் ஒரு இடத்தில் இருந்து அடுத்த சுற்றுலா மையத்திற்கு அழைத்து செல்லும் குறிப்பிட்ட இடங்களில் எங்கு வேண்டுமானலும் ஏறலாம், எங்கு வேண்டுமனாலும் இறங்கலாம்.
Comments are closed.