விஜய்யிடம் நலம் விசாரித்த அஜித்!
தலதளபதி தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்களை கொண்ட நடிகர்கள். இவர்கள் படம் வரும் போது வரும் ஓப்பனிங் எல்லாம் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இந்நிலையில், கனடாவில் தங்கியுள்ள நடிகர் விஜய்யின் மகன் பற்றி, நடிகர் அஜித் நலம் விசாரித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய். இவர், சினிமா தொடர்பான படிப்புக்காக கனடா நாட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் படித்து வருகிறார்.
இதை தொடர்ந்து விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் மாட்டிக்கொண்டதாக ஒரு செய்தி வந்தது. அதை தொடர்ந்து அவர் நலமுடன் உள்ளார் என்றும் விஜய் தரப்பு கூறியது.
இந்த தகவல் பரவியதும் இதுபற்றி அறிந்த அஜித், நடிகர் விஜய்யிடம் போனில் விசாரித்துள்ளார். சஞ்சய்யின் நலம் குறித்தும் கனடாவில் தற்போது இருக்கும் சூழல் பற்றியும் அவர் விசாரித்ததாகவும் அதற்கு விஜய் பதிலளித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
விஜய்யும் அஜித்தும் நேரம் கிடைக்கும்போது போனில் பேசிக்கொள்வது சஜகமான ஒன்றுதான் என்று அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்தனர்.
Comments are closed.