லீக் ஆனது ‘தளபதி 64’ படத்தின் டைட்டில்?

இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் விஜய் கைகோர்த்ததில் இருந்தே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை அடைந்தது. இதன்பிறகு, விஜய் சேதுபதியும் இந்தப் படத்தில் இணைய படத்தின் மீதான எதிர்பார்ப்பு அடுத்த கட்டத்துக்குச் சென்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதனை அடுத்து சற்று முன்னர் படக்குழுவினர்களிடம் இருந்து கிடைத்த தகவலின்படி இந்த படத்தில் விஜய்யின் கேரக்டர் பெயர் ஜேடி என்ற ஜேம்ஸ் துரைராஜ் என்றும் விஜய்யின் பெயர் தான் இந்த படத்தின் டைட்டில் என்றும் கூறப்படுகிறது.

எனவே இந்த படத்தின் டைட்டில் ’ஜேடி’ அல்லது ’ஜேம்ஸ் துரைராஜ்’ என்பதுதான் என்று தகவல்கள் கசிந்துள்ளன

விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த படம் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது


One thought on “லீக் ஆனது ‘தளபதி 64’ படத்தின் டைட்டில்?

 • December 9, 2021 at 6:51 am
  Permalink

  I’m really inspired together with your writing talents as well as with the structure for your weblog.
  Is that this a paid theme or did you customize it your self?
  Either way stay up the excellent high quality writing,
  it is rare to see a nice blog like this one these days..

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/