முதல்வர் இபிஎஸ் பேச்சுக்கு ஸ்டாலின் கண்டனம்

செல்வாக்கு இல்லாத கட்சிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுப்பதாக முதல்வர் கூறியதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக போராடுவோர் உணர்வுகளை எடப்பாடி பழனிசாமி கொச்சைப்படுத்தி உள்ளார்.

சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே திமுகவினர் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்க்கின்றனர். செல்வாக்கு இல்லாத கட்சிகள் ஒன்று திரண்டு மத்திய அரசுக்கு நெருக்கடி தருகின்றன. மத்திய அரசு உரிய விளக்கம் அளித்தும் குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து திமுகவினர் மக்களை குழப்பி சூழ்ச்சி என்றார்

இதற்க்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார் – “தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக போராடுவோர் உணர்வுகளை எடப்பாடி பழனிசாமி கொச்சைப்படுத்தி உள்ளார். சொந்த நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிபெறாத பழனிசாமி செல்வாக்கு பற்றி பேசுவது மிகப்பெரிய நகைச்சுவையாக உள்ளது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்”.



Comments are closed.

https://newstamil.in/