SBI 7.90% வீட்டு கடன் வட்டி குறைப்பு

ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம் உள்ளிட்ட அளவுகோல்களுக்கு ஏற்ப பாரத ஸ்டேட் வங்கி புத்தாண்டு பரிசாக எஸ்.பி.ஐ., வட்டி விகிதங்களை 0.25 சதவிகிதம் குறைத்துள்ளது.

கடன்களுக்கான வட்டி விகிதத்தை, 0.25 சதவீதம் குறைத்து, பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வட்டி குறைப்பு, ஜன.1 முதல் அமலுக்கு வருகிறது.

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை, ரிசர்வ் வங்கி தொடர்ந்து குறைத்து வந்த நிலையில், எஸ்.பி.ஐ., வங்கியும் அவ்வப்போது வட்டி விகிதத்தை குறைத்து அறிவித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது, 0.25 சதவீதம் வட்டியை குறைத்துள்ளது.

அதேபோல, புதிதாக வீட்டுக் கடன் பெறுபவர்களுக்கு வட்டி விகிதம் 7.9 சதவிகிதமாக இருக்கும் எனவும் பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.



Comments are closed.

https://newstamil.in/