1 ஆண்டு சிறை வீட்டைவிட்டு வெளியே வந்தால் – முதல்வர்

புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவை பின்பற்றாமல் மக்கள் நடமாட்டம் இருப்பதால் அவர்களை கட்டுப்படுத்தித் திருப்பி அனுப்புவதில் போலீஸார் திணறி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் நோய் எதிர்கொள்வது தொடர்பாக முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் சட்டமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊரடங்கு உத்தரவால் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று கூறியும் பொது மக்கள் அலட்சியமாக உ‌ள்ளன‌ர். தடை சட்டத்தை மீறுபவர்களுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்தார்.

கரோனாவின் பாதிப்பை உணராமல் புதுச்சேரியில் மக்கள் நடமாட்டம் இருப்பது ஆபத்துக்குரியதே என போலீஸார் கருத்து தெரிவித்தனர்.


Comments are closed.

https://newstamil.in/