பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு; ஜனவரி 6-ம் தேதி திறக்க வாய்ப்பு?

SHARE THIS
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

டிசம்பர் 21ஆம் தேதி முதல் வரும் ஜனவரி 2, 2020 வரை தொடர் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக உயர்கல்வித் துறை அறிவிக்கப்பட்டிருந்தது பள்ளிகள் 3-ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், வாக்குச்சீட்டு முறை என்பதால் வாக்கு எண்ணிக்கை மறுநாள் வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது. பள்ளிகளில் வாக்கு எண்ணும் மையம் அமைத்திருப்பதால், திட்டமிட்டபடி பள்ளிகள் 3-ம் தேதி திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இதற்கேற்ப, ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் உட்பட அனைவரும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட வேண்டி உள்ளதால் 3-ம் தேதி பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

எனவே, பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது.

இந்த நிலையில், 4 மற்றும் 5-ம் தேதிகள் சனி, ஞாயிறு என்பதால் 6-ம் தேதி திங்கள் அன்று பள்ளிகள் விடுமுறை முடிந்து திறக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.


Tag: , , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Newstamil

FREE
VIEW