Thursday, September 10, 2026
ENTERTAINMENTLatest

புஷ்பவனம் குப்புசாமியின் மகள் மாயம்

பாடகர் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது மனைவி அனிதா குப்புசாமி ஆகியோர் திரைப்படங்களில் ஏராளமான நாட்டுப்புற பாடல்களை பாடி பிரபலமாகினர். கிராமிய பாடல்களுக்காக இவர் பல ஆராய்ச்சிகள் செய்துள்ளார், அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

குப்புசாமி-அனிதா குப்புசாமி தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளான பல்லவி, மருத்துவ மேற்படிப்பு படித்து வருகிறார். அவரை ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி முதல் காணவில்லை என அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகாரில் இரவு அவருக்கும் அவரது தங்கைக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும் அதில் கோபமடைந்த அவர், வீட்டிலிருந்த காரை எடுத்துக் கொண்டு வெளியே சென்றதாகவும், செல்போனையும் தொடர்புகொள்ள முடியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

போலீசாருக்கு கிடைத்த புகாரின் பேரில் தற்போது அவர்கள் தீவிர விசாரனையில் ஈடுபட்டுள்ளனர்.


Comments are closed.