ரூ.10 ஆயிரம் கோடி 20 கோடி பெண்கள் வங்கிக்கணக்கில்: நிர்மலா
கொரோனா ஊரடங்கால் இந்தியப் பொருளாதாரம் முடங்கிய நிலையில், அதை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடிக்கு நிவாரணத் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றார்.
இந்நிலையில், 20 கோடி பெண்களின் வங்கிக்கணக்கில் ரூ.10 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
8.19 கோடி விவசாயிகளுக்கு 2000 ரூபாய் ஜன் தன் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. என்.எஸ்.ஏ.பி மூலமாக பயனாளர்களுக்கு 3000 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்
தன்னிறைவு இந்தியாவின் திட்டத்தில் கடைசி கட்ட சிறப்பு திட்டங்களை வெளியிட்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: நாடு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது. இக்கட்டான சூழலாக இருந்தாலும், இது நமக்கு ஒரு வாய்ப்பு என பிரதமர் கூறியுள்ளார்.
நிலம், தொழிலாளர், பணப்புழக்க சட்டங்கள் குறித்து கவனம் செலுத்தியுள்ளோம். சரக்குகளை கையாள்வதில் உள்ள சிரமங்களை போக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். ஊரடங்கு காலத்தில் பசியில் உள்ளவர்களுக்கு உணவு வழங்குவது நமது கடமை.
மத்திய மாநில அரசுகளுடன் இணைந்து உணவுக்கழகமும் மக்களுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்யும் ஏழைகளுக்கு ரேசன் பொருட்கள் கிடைக்க செய்த மாநில அரசுகளுக்கு பாராட்டுகள். பல்வேறு விதமான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.
பிரதமரின் கரீப் கல்யாண் திட்டம் மூலம் ஏழைகள் பலன்பெறும்ஏழைகளுக்கு அவர்களுடைய வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தின் கீழ் 8 கோடி ரூபாய்க்கும் மேல் விவசாயிகளுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய சவால்கள் வலிமைமிக்க இந்தியாவை உருவாக்கும். தனித்துவம் மிக்க இந்தியாவை மத்திய அரசின் திட்டங்கள் உருவாக்கும். உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இலவச காஸ் சிலிண்டர்கள வழங்கப்பட்டு வருகினறன.
பிஎப் கணக்கில் இருந்து 3,660 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.20 கோடி பெண்களின் ஜன்தன் வங்கிக்கக்கில் 10,025 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. 6.8 கோடி காஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
ரூ. 3950 கோடி கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.8.1 கோடி விவசாயிகளுக்கு கிஷான் யோஜனா திட்டத்தில் ரூ.16,394 கோடி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆத்ம நிர்பார் பாரத் என்னும் சுயசார்பு இந்தியாவை மீண்டும் ஒருமுறை குறிப்பிட்டுப் பேசிய நிர்மலா சீதாராமன், பொருளாதாரத் தொகுப்பு குறித்த அறிவிப்புகளைத் தொடர்ந்து பேசி வருகிறார்.
Comments are closed.