ஊரடங்கு பசி கொடுமை – ஆற்றில் 5 பிள்ளைகளை வீசி கொன்ற தாய்!
ஒரு பெண் தனது ஐந்து குழந்தைகளை உத்தரபிரதேசத்தின் படோஹி மாவட்டத்தில் ஜெகாங்கிராபாத்தில் உள்ள கங்கா ஆற்றில் வீசினார்.
மீட்புப் படையினர் குழந்தைகளைத் தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்ட மஞ்சு யாதவ் மற்றும் அவரது கணவர் மிருதுல் யாதவ் ஆகியோர் கடந்த ஒரு வருடமாக குடும்ப பிரச்சினைகள் தொடர்பாக போராடி வருவதாக மூத்த போலீஸ் அதிகாரி ராம் பதான் சிங் தெரிவித்தார்.
இதற்கிடையில், அந்த பெண் தனக்கும் தனது குழந்தைகளுக்கும் உணவைப் கொடுக்க முடியவில்லை என்று முன்னர் கூறியதாகவும், அவர் தினசரி ஊதியம் பெறுபவர் என்பதால் பணப்புழக்கம் நிறுத்தப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பின்னார் தானும் தற்கொலைக்கு முயன்ற நிலையில், திடீரென மனம் மாறி கரை சேர்ந்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் கங்கை ஆற்றில் மூழ்கிய 5 பிள்ளைகளை தேடி வருகின்றனர்.
“எங்கள் முன்னுரிமை குழந்தைகளை விரைவில் மீட்பதே, நாங்கள் பிற விசாரணைகளை பின்னர் மேற்கொள்வோம்” என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.
கணவனுடன் வாக்குவாதத்திற்குப் பிறகு அந்தப் பெண் தனது குழந்தைகளை கங்கைக்குள் வீசியதாகக் கூறப்படுகிறது. ஆற்றில் இருந்து இதுவரை 11 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.