மாஸ்டரின் குரலுக்காக காத்திருக்கிறீர்களா? கமல்ஹாசன் கேள்வி

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,152 ஆக அதிகரித்துள்ளது. 308 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக எஜமானரின் உத்தரவு குரலுக்காக காத்திருக்கிறீர்களா? என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. மார்ச் 24-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாளையுடன் நிறைவுபெறுகிறது. இருந்தும் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்துதான் வருகிறது.

இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று ஒடிஷா, தெலுங்கானா மாநில முதல்வர்கள் அறிவித்துள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ மத்திய அரசு இது தொடர்பாக அறிவிக்கட்டும் என கூறியிருந்தார். இது பெரும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.

இதுகுறித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டர் பதிவில், ‘ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து மற்ற மாநில முதல்வர்கள் தன்னிச்சையாக முடிவுகள் எடுத்துவரும் எங்களுடைய முதல்வர் எதற்காக காத்திருக்கிறார்? அவருடைய தலைவரின் குரலுக்காகவா? என்னுடைய குரல் மக்களுக்கானது? அவர்களிடமிருந்து வருவது. நீங்கள் இன்னமும் நாற்காலியில் உட்கார்ந்திருந்தால் எந்திரியுங்கள் சார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


18 thoughts on “மாஸ்டரின் குரலுக்காக காத்திருக்கிறீர்களா? கமல்ஹாசன் கேள்வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/