மாணவர்கள் பெண்களை சைட் அடிக்க போராட்டத்திற்கு வராங்க – ஒய்.ஜி சர்ச்சைக் கருத்து!

போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களில் 25% பேர் மட்டுமே அறிவுடன் போராடுவதாக, பெண்களை சைட் அடிக்க மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என்று நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கடந்த ஒருவார காலமாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் தொடங்கி நாடு முழுவதும் இருக்கக்கூடிய பல்வேறு பல்கலைக்கழக மாணவர்களும் தன்னெழுச்சியாக களத்தில் இறங்கி போராடி வருகின்றனர்.

சென்னை போரூரை அடுத்த கெருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் ஒய்.ஜி.மகேந்திரன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் போராட்டம் என்று நடத்திக் கொண்டிருக்கின்றனர். பல்பொடி சரி இல்லை என்றால் கூட போராட்டம் நடத்துகின்றனர். வள்ளுவர் கோட்டத்தில் போராட்டங்களை நடத்தி வள்ளுவரை சாகடிக்கின்றனர்” என்றார்.

மேலும் “பெண்களை கவர்வதற்காகவும், வகுப்புகளை புறக்கணிக்கவுமே மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. இதை யாரும் தவறாக எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை” என்றார்.

மேலும் பேசிய அவர், ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் மகிழ்ச்சி. வன்முறை பற்றி ரஜினிதான் பேச வேண்டும் என்ற அவசியம் இல்லை. அரசியல்வாதிகள் மாணவர்களை தவறாக பயன்படுத்துகின்றனர். வன்முறையில் ஈடுபட்டிருந்தால் மகாத்மா காந்தி இந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்திருக்க முடியாது. அதனால் வன்முறை எதற்குமே தீர்வாகாது” என்றார்.


79 thoughts on “மாணவர்கள் பெண்களை சைட் அடிக்க போராட்டத்திற்கு வராங்க – ஒய்.ஜி சர்ச்சைக் கருத்து!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/