இனி அஜித் நடிக்க மாட்டார்?
சினிமாவில் நடிப்பதோடு கார் ரேஸ், மெக்கானிக், போட்டோகிராபி, ஏரோ மாடலிங் தயாரிப்பு, சமையல், ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல், கல்லூரி மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிப்பது என அனைத்து துறைகளிலும் நடிகர் அஜித்குமார் ஈடுபட்டு வருகிறார்.
தல அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து அதிக வசூல் சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இம்மாதம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தல அஜித் எடுத்துள்ள அதிரடி முடிவு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம் “சினிமா எனது தொழில் தான், வித்தியாசமான படங்களில் நான் அதிகமாக நடித்து விட்டேன். மேலும் தொடர்ந்து சினிமா குறித்தே சிந்தித்து எனக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்திக்கொள்ள விரும்பவில்லை.
Rifle Shooting, Cycling, Remote Control Helicopter, Photography என எனக்கு பிடித்த விஷயங்கள் நிறைய உள்ளது. நான் நடிகனாக மட்டும் தொடர விரும்பவில்லை. எனக்கும் ரசிகர்களுக்கும் பிடித்த திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன்.
Comments are closed.