நெல்லை கண்ணன் மருத்துமனையில் அனுமதி; அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு! – வீடியோ
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து பேசியதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து பிரபல பேச்சாளர் நெல்லை கண்ணன் மீது போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருநெல்வேலி, மேலப்பாளையத்தில், எஸ்.டி.பி.ஐ., அமைப்பு சார்பில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
இதில் பேசிய பேச்சாளர் நெல்லை கண்ணன்,பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதுாறாக பேசியதாகவும், குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து பேசுகையில் சோலியை முடிக்க வேண்டும் என்று நெல்லை பாஷையில் பேசியதாக பரபரப்பு வீடியோ ஒன்று வைரலானது.
மேலும் ஹிந்து மதம் குறித்து அவதுாறாக பேசியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பா.ஜ.,வினர் மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமையில் நேற்று போலீஸ் கமிஷனர் தீபக் தாமோரிடம் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து நெல்லை கண்ணன் மீது மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் நெல்லை கண்ணன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து அவரை வெளியற்றக்கோரி பாஜகவினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.