விஜய் 65 – விஜய்யுடன் இணையும் இயக்குனர் இவர்தான்?

விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகிய இருவரும் துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய மூன்று படங்களில் இணைந்து பணிபுரிந்து இருக்கிறார்கள். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் விஜய் ஒரு படத்தில் நடித்து இருக்கிறார்.

இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் விஜய் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவி வருகிறது. விஜய் இப்போது அவருடைய 64-வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்து வருகிறார்.

இந்த படத்திற்கு பிறகு விஜய் படத்தை யார் இயக்க போகிறார்கள் ஷங்கர்ரா இல்லை ஏ.ஆர்.முருகதாஸ் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.

இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார்' படத்தை இயக்கி முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து விஜய்யின் 65-வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவார் என்று பேச்சு அடிபடுகிறது.துப்பாக்கி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கலாமா? என்று ஏ.ஆர்.முருகதாஸ் யோசித்து வருகிறார். `துப்பாக்கி’ படத்தின் கதை மும்பையில் நடப்பது போல் இருக்கும்.

அதே கதைக்களத்தை புதிய படத்துக்கும் வைத்துக் கொள்ளலாமா? அல்லது வேறு ஒரு கதைக்களத்தை பயன்படுத்தலாமா? என்று உதவி டைரக்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார், ஏ.ஆர்.முருகதாஸ். விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் மீண்டும் கூட்டணி சேர்ந்தால், அது அவர்கள் இணையும் நான்காவது படமாக அமையும்.



Comments are closed.

https://newstamil.in/