பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

கடந்த ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. மேலும், 11-ம் வகுப்பில் சில தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.

சென்னையில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1 முதல் 12 வரை நடக்கும். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அனைத்துவசதிகளும் செய்து தரப்படும்.

தனிநபர் இடைவெளியுடன் மாணவர்கள் தேர்வு எழுத ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். பள்ளிகள் திறப்பது என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பொதுத்தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பல்வேறு கட்டங்களாக ஆய்வு நடத்திய நிலையில், வரும் ஜுன் 1-ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 1 – பத்தாம் வகுப்பு மொழிப்பாடம்
ஜூன் 3 – ஆங்கிலத் தேர்வு நடைபெறும்
ஜூன் 5 – கணிதத் தேர்வு நடைபெறும்
ஜூன் 8 – அறிவியில் தேர்வு நடைபெறும்
ஜூன் 10 – சமூக அறிவியல் தேர்வு நடைபெறும்
ஜூன் 12 – தொழிற்பிரிவு தேர்வு நடைபெறும்



Comments are closed.

https://newstamil.in/