சத்தமில்லாமல் விஜய் டிவி செய்த நல்லகாரியம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 82 ஆயிரத்தை நெருங்குகிறது. 81,970 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,649 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்று காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மூன்றாம் கட்டமாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் அனைத்து விதமான படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தமிழ் திரையுலகில் மட்டும் சுமார் 600 கோடி அளவிற்கு முடங்கியுள்ளது. 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெப்சி தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.

ஒருவேளை உணவிற்கு கூட வழியின்றி தவிக்கும் பெப்சி தொழிலாளர்களுக்கு பலரும் தங்களால் ஆன உதவிகளை பல நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் உதவி வருகின்றனர். திரைத்துறையை போலவே சின்னத்திரையும் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை தயாரிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதால் டி.வி.சேனல்கள் கடும் நஷ்டமடைந்துள்ளன.

இந்நிலையிலும் விஜய் தொலைக்காட்சி வறுமையால் வாடும் பெப்சி தொழிலாளர்கள் 750 பேருக்கு ஒரு மாத வருமானத்தை தந்துள்ளது. அதாவது சுமார் 75 லட்சத்தை நன்கொடையாக கொடுத்துள்ளது இதுகுறித்து பெப்சி தொழிலாளர்கள் விஜய் தொலைக்காட்சிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.



Comments are closed.

https://newstamil.in/