யார் பாடியது ஒரு குட்டிக்கதை? – விஜய் மாஸ்டர் புதிய தகவல்
இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். மாஸ்டர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, சாந்தனு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
மாஸ்டர் படம் தளபதி நடிப்பில் ஏப்ரல் மாதம் வெளிவரவுள்ளது. இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தையே அதிர வைத்தது, அதை தொடர்ந்து செகண்ட் லுக், மூன்றாவது லுக் அனைத்தும் சரவெடி தான்.
தற்போது மாஸ்டர் தீம் மியூஸிக்குடன் ஒரு குட்டிக்கதை சிங்கிள் அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இன்று வெளியான அடுத்த அறிவிப்பில் ஒரு குட்டிக் கதை என்று தொடங்கும் முதல் பாடலை அனிருத் இசையில் விஜய் தனது சொந்தக் குரலில் பாடியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.