அதிரடி காட்டிய விஜய் – ‘மக்களுக்கு தேவையானத தான் சட்டமா இயற்றனும்’

மக்களுக்கு தேவையானதை தான் சட்டமாக இயற்ற வேண்டும், சட்டத்தை இயற்றிவிட்டு மக்களை அதற்குள் இருக்குமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என்று நடிகர் விஜய் சிஏஏவை குறிப்பிடாமல் அதற்கு எதிராக பேசியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். சாந்தனு பாக்யராஜ், ஆண்ட்ரியா உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்து வருகிறது.

இதில் நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசும்போது, சந்தோஷமாக இருக்கிறேன். முன் வரிசையில் என் உறவினர்கள் இருக்கிறார்கள். பின்னால் இருப்பவர்களும் என் உறவினர்கள்தான். சந்தோஷத்தில் எனக்கு பேச்சே வரவில்லை. விஜய்யை மாஸ்டராகப் பார்ப்பது பற்றி கேட்கிறார்கள். அதற்கு உழைப்புதான் காரணம். எனக்கு தமிழே சரியாக வராது. ஆனால், இந்தி உட்பட சில பிறமொழி ஹீரோக்களை இயக்கி இருக்கிறேன். அதற்கு காரணமும் உழைப்பு. விஜய்யை, நான் நாளைய தீர்ப்பு என்று ஏற்கனவே நான் கணித்து இருக்கிறேன். நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்களோ தெரியாது. நான் எதிர்பார்ப்பது வேற” என்றார்.

மாஸ்டர் பட விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவரிடம் தற்போதைய தளபதி விஜய் 20 வருடங்களுக்கு முன்பிருந்த இளையதளபதியிடம் ஏதாவது கேட்க வேண்டும் என்றால் என்ன கேட்பீர்கள் என்று தொகுப்பாளினி பாவனா கேள்வி எழுப்பினார். இதற்கு நடிகர் விஜய், இளையதளபதியாக இருக்கும் போதும் வாழ்கை அமைதியாக இருந்தது ரைடு இல்லாமல் என்று கூறினார். இதே போல் மக்களுக்கு தேவையானது எதுவோ அதைத்தான் சட்டமாக இயற்ற வேண்டும் என்று விஜய் கூறினார். சட்டத்தை இயற்றிவிட்டு அதற்குள் மக்களை அடைக்க கூடாது என்றும் விஜய் தெரிவித்தார்.

Image

விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகரிடம், விஜய்க்கு பாடல் பாடுவது உங்கள் மூலமாகத்தான் வந்திருக்கும். விஜய் பாடியதில் உங்களுக்கு பிடித்த பாடல் எது? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘குட்டி ஸ்டோரி’தான் பிடித்த பாடல் என்றார். ‘தமிழ்நாட்டுல அவர்ட்ட நிறைய பேர் நிறைய விஷயங்களை எதிர்பார்க்கிறாங்க. ஓர் அம்மாவா நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்க?’ என்று கேட்டதும், விஜய்யிடம் நான் எதிர்பார்ப்பது ஒரே ஒரு ஹக் மட்டுமே என்றார். உடனடியாக மேடையேறிய விஜய், அம்மா ஷோபாவையும் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரனையும் கட்டிப் பிடித்தார்.



Comments are closed.

https://newstamil.in/