ஆரி படத்தில் லாஸ்லியாவுடன் இணைந்த அபிராமி
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் பங்குபெறும் போட்டியாளர்களுக்கு நிச்சயம் பட வாய்ப்புகளை அமைத்துக் கொடுத்துவிடும் ஒரு பாலமாக இருந்து வருகிறது.
இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய லாஸ்லியா கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் தற்போது இரண்டு படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.
இந்தநிலையில் லாஸ்லியா, ஹர்பஜன் சிங் உடன் ஒரு படத்திலும் நெடுஞ்சாலை பட நாயகன் ஆரி நடித்துவரும் ஒரு படத்திலும் கமிட் ஆகி இருக்கிறார்.
இந்தப் படத்தில் ஸ்ருஷ்டி டாங்கே நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது பிக்பாஸ் அபிராமியும் இணைந்துள்ளார்.
இந்நிலையில் ஆரியின் 34-வது பிறந்தநாளான இன்று படக்குழு வாழ்த்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதிலும் தன் படத்தைப் பற்றி பிரக்கிங் நியூஸ் சொல்கிறார் லாஸ்லியா. அவரைத் தொடர்ந்து பேசும் ஸ்ருஷ்டி டாங்கே, கடந்த படத்தில் ராஜாவுக்கு செக் வைத்தேன். இந்தப் படத்தில் ஆரிக்கு செக் வைக்கிறேன் என்கிறார்
படத்திலும் லாஸ்லியா சொந்த குரலில் பேச இருக்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.