புதன்கிழமை, செப்டம்பர் 30, 2026
ENTERTAINMENT

நடித்துக்காட்டுமாறு போலீஸார் என்னை துன்புறுத்துகின்றனர் – கமல்ஹாசன்

இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து வழக்கில் காவல்துறை துன்புறுத்துவதாக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் முறையீடு செய்துள்ளார். விபத்து நடந்தது எப்படி என நடித்துக்காட்டுமாறு துன்புறுத்தல் செய்கின்றனர் என கமல்ஹாசன் புகார் அளித்துள்ளார்.

கமல்ஹாசனிடம் இரண்டரை மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடைபெற்றது. அவரது வாக்கு மூலம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. விசாரணை முடிந்து கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் நடந்ததை கூறினேன். இனி இது போன்ற விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி இருந்தார்.

இந்த நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து வழக்கில் போலீசார் விசாரணை என்ற பெயரில் தன்னை துன்புறுத்துவதாக விபத்து நடந்தது எப்படி என நடித்துக்காட்டுமாறு துன்புறுத்தல் செய்கின்றனர் என சென்னை ஐகோர்ட்டில் நடிகர் கமல்ஹாசன் அவசர முறையீடு செய்துள்ளார்.

அதில் 3 பேர் உயிரிழந்த விபத்து தொடர்பாக நடித்து காட்டும்படி மத்திய குற்றப்பிரிவு தன்னிடம் வற்புறுத்துகிறது என அதில் தெரிவித்து உள்ளார்.

வழக்கை அவசர வழக்காக பிற்பகலில் விசாரிக்க நீதிபதி இளந்திரையன் ஒப்புதல் அளித்துள்ளார்.