பேண்டிற்குள் புகுந்த நல்லபாம்பு; 7 மணிநேர போராட்டம்! – வீடியோ

இந்தியாவின் உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள மிசாரப்பூர் மாவட்டத்தின் சிந்தக்கரபூர் கிராமத்தில் மின்வாரிய அதிகாரிகளை, மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

இந்த பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் அங்குள்ள கிராம அங்கன்வாடியில் தங்கியிருந்து பணியாற்றி வந்த நிலையில், பணியை முடித்த தொழிலாளி நன்கு அயர்ந்து உறங்கிக்கொண்டு இருந்துள்ளார்.

அந்த நேரத்தில், லவ்லெஷ் என்ற தொழிலாளியின் பேண்டிற்குள் பாம்பு ஒன்று புகவே, தனது பேண்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்துள்ளது என்பதை உணர்ந்து நள்ளிரவு நேரத்தில் கடுமையான அச்சத்திற்கு உள்ளாகியுள்ளார். இதனையடுத்து சக தொழிலாளிகளிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.

மேலும், அதிகளவு பயத்தால் அசைந்தால் பாம்பு கடித்துவிடும் என்ற பயத்தில் பேண்டிற்குள் இருந்த பாம்பை அசையாமல் பிடித்துக்கொண்டு இருந்துள்ளனர். பின்னர் உள்ளூர் மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பாம்பு பிடிக்கும் நபர் வரவழைக்கப்பட்டார்.

இதன்பின்னர் ஜீன்ஸ் பேண்ட்டை சிறிது சிறிதாக கிழித்து பாம்பை வெளியே எடுத்துள்ளனர். 7 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் பாம்பு வெளியே எடுக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை அறிந்த உள்ளுர் மக்களும், பக்கத்து கிராம மக்களும் சம்பவ இடத்தில் குவிந்துவிட்டனர்.



Comments are closed.

https://newstamil.in/