தமிழ் சினிமாவில் பாலியல் தொல்லை; ஆதாரம் உள்ளதாக வரலட்சுமி பகிர் பேட்டி!

சரத்குமாரின் மகளான வரலட்சுமி தமிழ் சினிமாவில் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது தனக்கும் நடந்ததாக சொல்லியுள்ளார்.

வரலட்சுமி சரத்குமார் போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகுக்குள் நுழைந்தார். அதன் பிறகு தாரை தப்பட்டை, சர்கார், சண்டக்கோழி ஆகிய திரைப்படங்களில் அவர் நடித்தார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு செய்தி தொலைக்காட்சியில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் தானும் திரையுலகில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளானதாக சொல்லியுள்ளார்.

அவரது நேர்காணலில் ‘நான் சினிமா பிரபலத்தின் மகள் என சொன்னபோதும், என்னை படவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர். தயாரிப்பாளர்கள், இயக்குனர்களின் அட்ஜெஸ்ட் செய்யும்படி கேட்டார்கள். அப்படி சிலர் பேசியதன் ஆதாரம் என்னிடம் இருக்கிறது.’ எனக் கூறியுள்ளார்.

இவரது இந்த பேட்டியை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த ராதிகா சரத்குமார் வரலட்சுமியின் தைரியத்தைப் ஆமோதித்துள்ளார்.


232 thoughts on “தமிழ் சினிமாவில் பாலியல் தொல்லை; ஆதாரம் உள்ளதாக வரலட்சுமி பகிர் பேட்டி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/