விஜய் ‘மாஸ்டர்’ மூன்றாவது லுக் போஸ்டர் | Master 3rd look poster

விஜய் நடிப்பில் உருவாகிவரும் மாஸ்டர் திரைப்படத்தின் “Third look poster” 5 மணிக்கு வெளியானது.

விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன் ஆகியோரின் நடிப்பில் ”மாநகரம்” “கைதி” ஆகிய திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ்-ன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “மாஸ்டர்”. இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் ஆகிய இரண்டும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்திலும் ஏக எதிர்பார்ப்பிலும் தள்ளியது.

இந்நிலையில் இன்று குடியரசு தினத்தில் வெளியான “மாஸ்டர்” திரைப்படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் டாப் ட்ரெண்டிங்ல வச்சிருக்காங்க.

இந்த போஸ்டரில் மாஸ்டர் படத்தின் ஹீரோ விஜய் மற்றும் வில்லன் விஜய் சேதுபதி இடம்பெற்றுள்ளனர். இருவரும் ரத்தம் சொட்ட சொட்ட வெறித்தனமாக கத்துவது போன்று உள்ளது மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர்.

விஜய் சேதுபதி கழுத்தில் ருத்ராட்சை மாலைகளை அணிந்திருக்கிறார். இருவரும் சட்டை போடாமல் வேறும் உடம்புடன் சண்டையிடும் காட்சியாக உள்ளது இந்த மூன்றாவது லுக் போஸ்டர்.


75 thoughts on “விஜய் ‘மாஸ்டர்’ மூன்றாவது லுக் போஸ்டர் | Master 3rd look poster

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/