நீ கன்னி தன்மையோடு இருக்கியா? ரசிகரின் கேள்விக்கு பதில் தந்த சம்யுக்தா மேனன்!

மலையாள நடிகையான சம்யுக்தா மேனன், தமிழில் களரி, ஜூலை காற்றில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சம்யுக்தா மேனனிடம் ஒருவர் கேள்வி எழுப்பினார் ‘நீ கன்னியா இல்லையா? என்று, இதுபோன்ற சங்கடமான கேள்வியை எதிர்கொண்டவுடன், பல நடிகைகள் புறக்கணிக்கிறார்கள், ஆனால் அவர் ஒரு பொருத்தமான பதிலை அளித்துள்ளார்.

“ஹாஹா… மரியாதைக்குரிய அதுல் பிகே, வெர்ஜினிடி, செக்ஸ், ஆல்கஹால் உள்ளிட்டவை பற்றி கேட்டால் பெண்கள் பயந்து விடுவார்கள் என நினைக்கிறீர்களா? இல்லை இப்படி ஒரு கேள்வி கேட்டால் தனியாக தெரிவோம் என நினைக்கிறீர்களா?

எந்த பெண்ணை பார்த்தாலும் பொதுவாகவே நீங்கள் இப்படி தான் யோசிப்பீர்களா. உங்களுக்கு ஏதோ ஒரு பெரிய பிரச்சனை இருக்கிறது. உங்களுடைய போக்கு சரியானது அல்ல. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். யாரிடமாவது அடி வாங்கிவிட போகிறீர்கள்” என விளாசினார்.

சம்யுக்தாவின் இந்த பதிலை அவரது ரசிகர்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.Comments are closed.

https://newstamil.in/