வலிமை படப்பிடிப்பில் அஜித் விழுந்த வீடியோவா இது?

இயக்குநர் வினோத் இயக்கத்தில் உருவாகும் வலிமை படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் அஜித்திற்கு காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தல அஜித்தின் ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது வலிமை படப்பிடிப்பு தளத்தில் நடந்த எதிர்பாராத சம்பவம். பைக் ஸ்டண்ட் காட்சிகளுக்காக பணியில் ஈடுபட்ட அஜித் எதிர்பாராத விதமாக தவறி கிழே விழுந்தார்.

நடிகர் அஜிதிற்கு படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டதை அறிந்த அவரது ரசிகர்கள் டுவிட்டரில் #GetWellSoonTHALA என்ற ஹேஸ்டக் உருவாக்கி அஜித் விரைவில் குணமடைய வேண்டும் என ட்ரெண்ட் செய்துவருகின்றனர். இந்த ஹேஸ்டேக் இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் டிரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதே வேளையில் இந்த வீடியோ உண்மை தானா என பலருக்கும் கேள்வி எழுந்தது.

நம் தரப்பில் விசாரிக்கையில் இது உண்மையான வீடியோ இல்லை, இது பல வருடங்களுக்கு முன்பு வந்த ஒரு வீடியோ. இதோ அந்த Fake வீடியோ…யாரும் இதை நம்பவேண்டாம்.Comments are closed.

https://newstamil.in/