கொரோனாவால் தமிழகத்தில் முதல் இழப்பு

SHARE THIS
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

தமிழகத்தில் கொரோனாவிற்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொரோனா காரணமாக பாதிப்படைந்த மதுரையைச் சேர்ந்த நபர் உயிரிழந்துள்ளார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். கொரோனவால் தமிழகத்தில் ஏற்பட்ட முதல் இழப்பு இதுதான். 54 வயதான அந்த நபர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் உடல் பாதுகாப்புடன் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு நள்ளிரவிலே இறுதிச்சடங்கும் நடைபெற்றது.


Tag: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *