எஸ்.பி.பி. கவலைக்கிடம்; மருத்துவமனைக்கு நடிகர் கமல் வருகை
கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 5-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டார். பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை எஸ்.பி.பி.உடல்நிலை குறித்து விடுத்திருக்கும் அறிக்கையில், கடந்த 24 மணி நேரமாக அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் என அறிவிப்பு வெளியாகிய நிலையில் அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நடிகர் கமல் வந்தார். பின்னர் எஸ்.பி.பி. மகன் சரணிடம் சிகிச்சை முறை குறித்து விசாரித்தார்.
கமல் கூறியதாவது: எஸ்.பி.பி. நலமாக இருக்கிறார் என்று கூற முடியாது. உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.மருத்துவ குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது என்றார்.
Comments are closed.