ராணாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது

ராணா டகுபதி காதலி மிஹீகா பஜாஜுடன் அதிகாரப்பூர்வமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டார், விழாவின் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது!!

பாகுபலி படம் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகர் ராணா, சமீபத்தில் தனது காதலி இவர் தான் என மஹீகா பஜாஜ் என்பவரை அறிமுகம் செய்தார்.

இவர் ஒரு இண்டிரீயர் டிசைனர், மாடல் என பன்முகம் கொண்டவர். இவர்களது காதலுக்கு இருவரது வீட்டிலும் சம்மதம் சொல்லிவிட்டனர்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ராணா டகுபதி. இவர் எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி பிரமாண்ட வெற்றிபெற்ற பாகுபலி படத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர். நடிகை த்ரிஷாவை காதலித்து வந்த இவர் பின்னர் இவர்களுக்கு இடையே காதல் முறிவு ஏற்பட்டது.

Image

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் பெண் தொழில் அதிபர் ஒருவர் தன் காதலை ஏற்றுக் கொண்டதாக கூறியிருந்தார். இதனையடுத்து தற்போது இவர்களுக்கு சிம்பிளாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் நெருங்கிய உறவினர்களை மட்டுமே அழைத்திருந்தனர். டிசம்பரில் திருமணம் நடக்கலாம் என கூறப்படுகிறது.

Image

நிச்சயதார்த்தம் நடந்த தகவலை இன்ஸ்டாகிராமில் போட்டோ போட்டு இதோ அதிகாரப்பூர்வமாக என பதிவிட்டுள்ளார் ராணா. பலரும் இவர்களுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.


129 thoughts on “ராணாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/