பெரியார் பற்றி எச்.ராஜா மற்றும் தமிழக பாஜகவின் ட்விட்டர் பதிவால் சர்ச்சை!

SHARE THIS
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பகுத்தறிவு பகலவன் என்றும் திராவிட சித்தாந்தத்தின் ஆசானாகவும் பார்க்கப்படுகின்ற ஈ.வே.ராமசாமி என்னும் பெரியாரின் நினைவு தினமான இன்று தமிழக பாஜக ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் கருத்து உள்ளனர்.

அதில், “மணியம்மையின் தந்தை ஈவே.ராமசாமியின் நினைவு தினமான இன்று. குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவதை ஆதரித்து, போக்ஸோ (Pocso) குற்றவாளிகளே இல்லாத சமூகத்தை உருவாக்க உறுதிகொள்வோம்,” என்று தமிழக பாஜக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த பதிவு பிறகு நீக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், ஈவேரா பாகிஸ்தான் கோரிக்கைக்கு ஆதரவு தந்தார். அதேபோல லண்டனில் இருந்து கொண்டாவது சென்னை ராஜதானியை ஆளவேண்டும் என்று தீர்மானம் போட்டார். ஆகவே இந்த நாட்டில் அமைதிக்கு விரோதமாக இருப்பது “டெரரிஸ்ட்களும் பெரியாரிஸ்ட்களும்” என்று கருத்து கூறியுள்ளார். இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.


Tag: , , , , , , , , ,

One thought on “பெரியார் பற்றி எச்.ராஜா மற்றும் தமிழக பாஜகவின் ட்விட்டர் பதிவால் சர்ச்சை!

 • December 24, 2019 at 1:17 pm
  Permalink

  பெரியாரை பற்றி உனக்கு என்னடா தெரியும்

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *