பட்டாஸ்: விமர்சனம் – 2.50/5
நடிகர்: தனுஷ்
நடிகை: சினேகா
இயக்குனர்: துரை செந்தில்குமார்
இசை: விவேக்-மெர்வின்
ஓளிப்பதிவு: ஓம் பிரகாஷ்
நேரம்: 2 மணி நேரம் 22 நிமிடம்
ரேட்டிங்: 2.50/5
பட்டாஸ்: விமர்சனம்
Overall
- Critic's Rating
- Avg. Users' Rating
User Review
( vote)விமர்சனம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் டபுள் ரோலில் நடித்துள்ள பட்டாஸ் திரைப்படம் ரிலீசாகியுள்ளது.
குப்பத்து பகுதியில் வாழ்ந்து வரும் நாயகன் தனுஷ், சின்ன சின்ன திருட்டுகளை செய்து வருகிறார். அதே பகுதியில் இருக்கும் நாயகி மெஹ்ரின் பிர்சாடா அதிகமாக சம்பாதிப்பதால் அந்த ஏரியாவையே அராத்து பண்ணி வருகிறார்.
இவருடைய ஆட்டத்தை அடக்க திட்டம் போடும் தனுஷ், நவீன் சந்திரா நடத்தும் கிக் பாக்ஸிங் கிளப்பில் மெஹ்ரின் பிர்சாடா வேலை செய்வதை அறிந்துக் கொள்கிறார்.
மெஹ்ரீன் செய்யும் நக்கல் பிடிக்காமல் அவர் வேலை பார்க்கும் குத்துச்சண்டை பயிற்சி மையத்தில் இருக்கும் பதக்கங்கள், கேடயங்களை திருடுகிறார். இதனால் மெஹ்ரீனுக்கு பிரச்சனை ஏற்படுகிறது.
இதையடுத்து மெஹ்ரீன் மீது பாவப்பட்டு குத்துச் சண்டை பயிற்சி மையத்தில் இருக்கும் அவரின் சான்றிதழ்களை திருடச் செல்கிறார் தனுஷ்.
ஒரு வெள்ளைக்காரனைக் கொன்றதற்காக கேரளாவில் உள்ள சிறையில் தள்ளப்படுகிறார் சினேகா. தன் கணவன், மகன் இழந்த சோகத்தில் சிறையில் தன் வாழ்க்கையைப் பல வருடம் கழித்து விடுதலையாகிறார். சினேகா வெளியே வந்ததும் நேராக வில்லன் நவீன் சந்திரா கொலை செய்ய குத்துச் சண்டை பயிற்சி மையத்திற்கு வருகிறார்.
அப்போது தீ விபத்து ஏற்படுகிறது. இதிலிருந்து சினேகாவை காப்பாற்றுகிறார் தனுஷ். மேலும் தனுஷை பார்த்தவுடன் சினேகா அதிர்ச்சியடைகிறார். இறுதியில் சினேகா ஏன் நவீன் சந்திராவை கொல்ல முயற்சி செய்கிறார். தனுஷை கண்டு சினேகா அதிர்ச்சியடைய காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
விவேக் மெர்வின் இசையில் பாடல்கள் ஸ்வீட்டான ரகம். அதிலும் சில் ப்ரோ பாடலுக்கு நடன அமைப்பு இதயம் ஈர்ப்பு. தனுஷை வைத்து கொடி படத்தை இயக்கியிருந்த துரை செந்தில் குமார் தற்போது பட்டாஸ் படத்தில் மீண்டும் கூடியுள்ளார். கொடி படமே ஓகே. இந்த படம் கொஞ்சம் ஸ்லோ என சொல்லும் படி வைத்துள்ளார்.
தமிழ்நாட்டின் பாரம்பரியத் தற்காப்புக் கலையான அடிமுறை என்ற சண்டை முறையை கதையின் மையமாக வைத்திருக்கிறார் இயக்குனர். இதிலிருந்து பிரிந்தது தான் டேக்வோன்டோ, கராத்தே, குங்பூ போன்ற கலைகள். கையாலும், காலாலும் எதிராளியைத் தாக்கி வீழ்த்தும் சண்டை முறைதான் அடிமுறை. இப்படி ஒரு கலை இருக்கிறது என்பது இந்தப் படத்தைப் பார்த்த பிறகுதான் பலருக்கும் தெரிய வரும். அதற்காக இயக்குனருக்கு சிறப்புப் பாராட்டு.
தற்காப்பு கலையை மீண்டும் உயிர் பெற செய்த முயற்சி வரவேற்கத்தக்கது. ஆசானாகவும், திருடனாகவும் தனுஷின் நடிப்பு தனியான ஒன்று. பெண்களுக்கு பாதுகாப்பை வலியுறுத்தும் சினேகாவின் அதிரடி ஸ்டைல் படத்திற்கு வலு சேர்க்கிறது.
மொத்தத்தில் இந்த பொங்கலுக்கு பட்டாஸ் ஒரு சாத வெடி.