திட்டங்கள் 20 லட்சம் கோடி அல்ல; வெறும் 1.86 லட்சம் கோடிதான் – ப.சிதம்பரம்

பிரதமர் மோடியும், நிதியமைச்சரும் அறிவித்த பொருளாதார திட்டங்கள் போதுமானதாக இல்லை, திட்டத்தின் மதிப்பு 20 லட்சம் கோடி அல்ல, வெறும் 1.86 லட்சம் கோடிதான் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கூறியுள்ளாா்.

'1.86 Cr Not 20 Lakh Cr': Claims Chidambaram As Congress Requests For Revised Stimulus 2.0

கொரோனா ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் மிகப் பெரிய அளவில் சரிவைச் சந்தித்துள்ள நிலையில், அதனை மீட்டெடுக்கும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை கடந்த மே 13ம் தேதி முதல் 17 தேதி வரை 5 நாட்களாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இதுகுறித்து ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘பிரதமரும், நிதி அமைச்சரும் அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு வெறும் 1,86,650 கோடி தான் என குறிப்பிட்டுள்ளார். இந்த எண்ணை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள் என்றும், இன்னும் சில மாதங்களில் உண்மை தெரிந்துவிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



Comments are closed.

https://newstamil.in/