கிராமத்து கதையில் விஜய்: பாண்டிராஜ் இயக்கம்?

விஜய் 65ன் இயக்குநர் யார் எனும் ரசிகர்களின் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பிகில் படத்தைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இது விஜய்யின் 64வது படம்.

புத்தாண்டை முன்னிட்டு வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களை கவர்ந்த நிலையில் அடுத்தடுத்த அப்டேட்டுகளுக்காக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதை அடுத்து, விஜய்யின் 65வது படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்குவார் என தகவல்கள் கூறுகின்றன. தற்காலிகமாக தளபதி 65 என பெயர் சூட்டிவிட்டு, பின், நிரந்தர தலைப்பு வைக்கலாம் எனவும் கூறுகின்றனர்.

கடை குட்டி சிங்கம், எங்க வீட்டுப் பிள்ளை போன்று குடும்ப கதையம்சம் கொண்ட படமாக எடுக்கவும் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இந்தப் படம் குறித்த அறிவிப்பு பொங்கலை ஒட்டி அறிவிக்கப்படும் எனவும் சினிமா வட்டாரங்களில் கூறுகின்றனர்.


One thought on “கிராமத்து கதையில் விஜய்: பாண்டிராஜ் இயக்கம்?

  • November 24, 2023 at 9:00 am
    Permalink

    Hey There. I found your weblog using msn. That is a very well written article. I will make sure to bookmark it and return to learn more of your helpful info. Thanks for the post. I’ll definitely return.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/