வியாழக்கிழமை, அக்டோபர் 1, 2026
Latest

ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தின் சிசிடிவி காட்சி

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 11 பேரையும் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களே உண்மைக் குற்றவாளிகள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் போலீசார் சிசிடிவி ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர். அதில் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டி சாய்க்கும் பரபரப்பு காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

கைதானவர்களே உண்மைக் குற்றவாளிகள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் போலீசார் இந்த சிசிடிவி ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர். கொலை செய்தவர்களின் அடையாளங்களை குறிப்பிட்டு போலீசார் இந்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.