ஏப்.5ல் இரவு 9மணிக்கு அனைவரும் தீபம் ஏற்றுங்கள்: மோடி

ஏப்., 5 ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு, மெழுகுவர்த்தி,அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘ஏப்ரல் 5-ம் தேதி நமக்கு மிக முக்கியம். அன்று இரவு 9 மணிக்கு சரியாக 9 நிமிடம் வீட்டில் மின் விளக்குகளை அணைத்தைவிட்டு அகல் விளக்கு அல்லது மொபைல் டார்ச் லைட்டை அனைத்து வீட்டு பால்கனிகளிலும் ஏற்றி வைக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். நம் உற்சாகத்துக்கு மேலாக வேறு எந்த சக்தியும் இல்லை’, என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வை நோக்கி நாம் செல்ல வேண்டும். கொரோனா வைரசை பரவலை கட்டுப்படுத்த ஒளிமயமான காலத்தை கொண்டு வர வேண்டும்.



Comments are closed.

https://newstamil.in/