‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு தயாராகும் ராதிகா

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியினால், ‘கலையரசி’ என்று பட்டம் சூட்டப்பட்ட ராதிகா சரத்குமார் இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் 375 படங்களில் நடித்து இருக்கிறார், 43 வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

‘சின்னத்திரை’யில் 23 வருடங்களாக நடித்து வருகிறார். இவருடைய அடுத்த தொடர், ‘சித்தி-2. இப்போது அவர், ‘கோடீஸ்வரி’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

அவருடைய 375-வது படம், மணிரத்னத்தின் ‘வானம் கொட்டட்டும்.’ இதில் ராதிகா அவருடைய கணவர் சரத்குமாருடன் இணைந்து நடித்து இருக்கிறார்.

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் உள்பட தமிழ் பட உலகின் பிரபல நாயகர்கள் அனைவருடனும் ராதிகா சரத்குமார் ஜோடியாக நடித்து இருக்கிறார். தெலுங்கு பட உலகின் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியுடன் மட்டும் 26 படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்.

தனது தந்தை ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பது ராதிகா சரத்குமாரின் கனவு. இதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை அவர் தொடங்கி விட்டார்.


7 thoughts on “‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு தயாராகும் ராதிகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/