மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு கொரோனா

மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாநகரம், கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் ‘மாஸ்டர்’. இதில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை அடுத்தை கமலை வைத்து ‘விக்ரம்’ படத்தை இயக்க உள்ளார்.

இந்நிலையில் மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். விரைவில் நலம் பெற்று வலிமையுடன் திரும்புவேன் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



Comments are closed.

https://newstamil.in/