Friday, September 11, 2026
ENTERTAINMENTLatest

நான்கு வருடங்களுக்கு பிறகு லக்‌ஷ்மி மேனன் ரீ-எண்டரி!

எஸ். ஆர். பிரபாகரன் இயக்கத்தில் 2012-ஆம் ஆண்டு வெளியான ஆக்‌ஷன் டிராமாவான ‘சுந்தரபாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவைல் அறிமுகமானார்.

இந்நிலையில் தற்போது நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு தமிழ் படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் லக்ஷ்மி மேனன். முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் தான் லட்சுமி மேனன் ஹீரோயினாக நடிக்கிறார்.

கடைசியாக விஜய் சேதுபதியுடன் நடித்து வெளியான ‘றெக்க’ திரைப்படம் சரியான வரவேற்பைப் பெறாததை அடுத்து, அவர் எந்த படங்களிலும் ஒப்பந்தமாகவில்லை.

இந்நிலையில், நான்கு வருடங்கள் கழித்து லக்‌ஷ்மி மேனன் ரீ- எண்டரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் துவங்கி நடைபெறவுள்ளது.


Comments are closed.