இயக்குநர் ராஜ்கபூரின் 23 வயது மகன் மரணம்!

பிரபல இயக்குநர் ராஜ்கபூரின் மகன் ஷாருக் கபூர் இன்று உடல்நலக் குறைவு காரணமாக பலியான சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாலாட்டு கேட்குதம்மா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ் கபூர். தொடர்ந்து அஜித் நாயகனாக நடித்த அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே, உத்தமராசா, சமஸ்தானம் உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார்.

ராஜ் கபூருக்கு ஷஜீலா கபூர் என்ற மனைவியும், ஷாரூக் கபூர் என்ற ஒரு மகனும், ஷமீமா கபூர், ஷானியா கபூர் என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் 23 வயதாகும் ஷாரூக் கபூருக்கு கடந்த ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது, உடல்நிலை சரியானால் மெக்காவுக்கு புனிதப் பயணம் செல்ல வேண்டி திட்டமிடப்பட்டது.

ஷாரூக் கபூர் அவருடைய அம்மாவுடன் மெக்காவிற்கு புனித பயணம் மேற்கொண்டு இருந்தார். பருவ நிலை மாற்றத்தால் அவரது உடல்நிலை அங்கு போன அடுத்த நாளே மாற்றமடைந்துள்ளது. மேலும், கடுமையான மூச்சு திணறலும், அதிகப்படியான சளியும் இருந்துள்ளது. இதற்கிடையே இன்று அவரின் உடல்நிலை மோசமாகி அங்கேயே மரணமடைந்தார்.

அவரது மரணம் ராஜ் கபூரின் குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஷாரூக் கபூரின் உடலை மெக்காவிலேயே நல்லடக்கம் செய்ய இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மேலும் உடலை இந்தியா கொண்டு வருவதற்கு பெரிய அளவில் இந்திய அரசாங்கத்தின் உதவி தேவைப்படும் என்று சொல்லப்படுகின்றது.


13 thoughts on “இயக்குநர் ராஜ்கபூரின் 23 வயது மகன் மரணம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/