Thursday, September 10, 2026
LatestNEWS

நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச் 3ல் தூக்கு

டெல்லி: நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகளான முகேஷ் சிங், வினய் சர்மா, ஆகாஷ் குமார் சிங், பவன் குப்தா ஆகிய நான்கு குற்றவாளிகளும் மார்ச் 3 ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடப்பட உள்ளனர்.

குற்றவாளிகளில் ஒருவனா முகேஷ் சிங், தனக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி கருணை மனு தாக்கல் செய்திருந்தார்.

குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்த ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு படி நிர்பயா வழக்கில் குற்றவாளிகளை மார்ச் 3 ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை பற்றி நிர்பயா தாயார் கூறும்போது, “இது மூன்றாவது முறையாக மரண உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நான் மகிழ்ச்சியடையவில்லை. நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம், எனவே இறுதியாக மரண உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் திருப்தி அடைகிறேன். அவர்கள் (குற்றவாளிகள்) மார்ச் 3 ஆம் தேதி தூக்கிலிடப்படுவார்கள் என்று நம்புகிறேன்.”


Comments are closed.