தர்பார் ரூ. 150 கோடி வசூல் உறுதிசெய்த லைகா

தர்பார் படம் உலக அளவில் ரூ. 150 கோடி வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

லைகா தயாரிப்பில், முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் 9ம் தேதி வெளிவந்த படம் ‘தர்பார்’.

இப்படம் விடுமுறை நாளிலோ, விசேஷ நாளிலோ வெளியாகாமல் ஒரு சாதாரண வேலை நாளில் வெளியானதால் படத்தின் வசூல் சுமார் ரகமே என்றாலும், அடுத்தடுத்து விடுமுறை நாட்களில் வசூல் சிறப்பாகவே அமைந்தது.

படம் வெளியான மறுநாளே தர்பார் வசூல் ரூ.100 கோடி தாண்டியதாக சிலர் தகவல் பரப்பினர். ஆனால் அது உண்மையில்லை. தர்பார் படம் உலக அளவில் ரூ. 150 கோடி வசூல் செய்துள்ளதாக ஆளாளுக்கு பேசினார்கள். அதை பார்த்தவர்கள் காசா, பணமா அள்ளிவிடுங்க யார் கேட்க போகிறார் என்று கிண்டல் செய்தார்கள்.

இந்நிலையில் தான் லைகா நிறுவனம் தர்பார் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆம், தர்பார் உலக அளவில் ரூ. 150 கோடி வசூலித்துள்ளது என்று அந்த படத்தை தயாரித்த லைகாவே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதேசமயம் தனுஷின் பட்டாஸ் நாளை(ஜன., 15) வெளியாவதால் இதன் வசூல் சற்று பாதிக்கப்படலாம்.Comments are closed.

https://newstamil.in/