பிக்பாஸ் ரம்யாவுக்கு குழந்தை பிறந்தது!
தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார் ரம்யா என்எஸ்கே. மறைந்த நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கேவின் பேத்தி இவர். கடந்த வருடம் விஜய் டிவியில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரம்யா கலந்துகொண்டு கவனம் பெற்றார்.
எல்லோரிடன் அன்பு கொண்டு வந்த அவர் பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற சண்டை சச்சரவுகளில் இருக்க பிடிக்காமல் வெளியேறினார்.
ஆனால் அவரை ஒரு பாடகியாக பலரும் அறிந்து வைத்திருப்பார்கள். கோடான கோடி பாடல் இன்னும் யாராலும் மறக்க முடியாதது. கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் தன் காதலரான நடிகர் சத்யாவை திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் அவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஆண் குழந்தை பிறந்துள்ளதாம். நண்பர்களும், உறவினர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.