‘மாஸ்டர்’ திட்டமிட்ட நாளில் திரைக்கு வரும் – படக்குழு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் படத்தை வரும் ஏப்ரல் மாதம் 9ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருப்பதால் திரையரங்குகள் மார்ச் 31ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.

விஜய் மேடையில் ஆடிய நடனம் – வீடியோ

இதே நிலை தொடர்ந்தால் திரையரங்குகள் மூடல் தொடரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருந்த மாஸ்டர், சூர்யாவின் சூரரைப் போற்று ஆகிய படங்கள் திட்டமிட்டபடி திரைக்கு வருமா என்ற கேள்வி எழுந்தது.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழா – புகைப்படங்கள்

இந்நிலையில் மாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவுக்கு நெருக்கமான ஒருவர் கூறியதாவது, இதையடுத்து படக்குழுவிடமிருந்து கிடைத்த தகவலின் படி, மார்ச் 31-ம் தேதிக்குள் இந்த சூழ்நிலை மாறி கொரோனா பாதிப்பின் நிலைமை சீராகும் என்ற நம்பிக்கையில் இருப்பதாகவும், வீட்டுக்குள் முடங்கியுள்ள மக்கள் திரையரங்குக்குச் சென்று படம் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பார்கள். அந்த நேரத்தில் நாங்கள் அறிவித்தபடி மாஸ்டர் படம் திரைக்கு வரும். அதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம் என்றும் படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.Comments are closed.

https://newstamil.in/