அஜித்தின் மேலாளர் குடும்ப திருமணம்; வாசலில் நின்று வரவேற்ற அஜித்! வீடியோ
அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் வலிமை திரைப்படம் வேகமாக தயாராகிவருகிறது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங்கின் போது நடிகர் அஜித்குமாருக்கு சண்டைக் காட்சியில், கால் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் அஜித் லுக் வலிமை படத்தில் என்ன என்பது தற்போது வரை தெரியவில்லை, அப்படியிருக்க தற்போது ஒரு ஸ்டில் வெளிவந்துள்ளது.
ரசிகர்களின் ஆர்வத்திற்கு விருந்து வைக்கும் வகையில் பொது நிகழ்ச்சி ஒன்றில் அஜித் கலந்துகொண்டுள்ளார். சென்னை லீலா பேலஸில், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவின் சகோதரி மகள் திருமணம் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில்தான் அஜித் கலந்துகொண்டுள்ளார்.
திருமணத்திற்கு வந்தவர்களை வாசலிலேயே நின்று வரவேற்று, இது தன்னுடைய குடும்ப திருமணமே என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார் தல. இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
Comments are closed.