கடவுளுக்கு இரக்கம் இல்லை – நடிகர்கள் சேதுராமனின் மறைவுக்கு இரங்கல்

நேற்று இரவு சினிமா வட்டாரத்தையும் மருத்துவர்கள் வட்டாரத்தையும் கவலையில் ஆழ்த்திய செய்தி நடிகரும் மருத்துவருமான சேதுராமன் இறந்தார் என்ற தகவல்.

விக்ராந்த் : இதயம் நொறுங்கிவிட்டது. அதற்கு சென்று விட்டீர்களே சேது. ஆழ்ந்த இரங்கல்.

ரம்யா சுப்ரமணியம் : அதிர்ச்சி தரும் செய்தி. மிகவும் துரதிர்ஷ்டவசமானது. நல்ல விஷயங்களை மட்டுமே கொண்டிருந்த ஒழுக்கமான மனிதர். அவரின் குடும்பத்திற்கு கடவுள் உடன் இருக்கட்டும்.

விஷ்ணு விஷால் : சேதுவின் மரண செய்தியை கேட்டு மனம் உடைந்துவிட்டேன். நல்ல மனிதர். வாழ்கையில் எதுவும் நடக்கலாம். அன்பு செலுத்துங்கள்.

ஐஸ்வர்யா ராஜேஷ் : நல்ல நபர். அதிர்ச்சியாக உள்ளது, அதற்குள் சென்றுவிட்டார். ஆத்மா சாந்தியடைட்டும்.

சிபிராஜ் : நண்பர் சேதுராமனின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியில் உள்ளேன். அருமையான மனிதர். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

குஷ்பு : எனக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சேது. இரண்டு நாட்களுக்கு முன்பு தான் போனில் பேசினோம். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார். எல்லாவற்றையும் தாண்டி அருமையான மனிதர். அவரின் மகள் தான் அவருக்கு உலகம். என்ன செய்ய போகிறார் அவரது மனைவி, பாவம்.

சந்தானம் : என் அன்பு நண்பர் டாக்டர் சேதுவின் மறைவால் அதிர்ச்சியிலும், மன உளைச்சளிலும் உள்ளேன். அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்.

அர்ச்சனா : கடவுளின் விளையாட்டை புரிந்து கொள்ள முடியவில்லை. தாங்கமுடியாத இவரின் இறப்பை அவரின் குடும்பத்தார் எதிர்கொள்ளும் திறனை கடவுள் அளிக்கட்டும்.

அபிராமி : இதயத்தை உடைக்கு செய்தி. இரக்கமில்லாத கடவுள். வாழ்க்கை நிச்சயமற்றது என்று தெரியும், ஆனால் இது அதிர்ச்சி அளிக்கிறது. சேது நல்ல மருத்துவர் மட்டுமல்ல, அற்புதமான நம்பிக்கைக்குரிய நண்பர். ஆழந்த இரங்கல்.

அதுல்யா ரவி : மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அவர் இல்லை என நம்ப முடியவில்லை. இயற்கையிலேயே நன்கு ஆரோக்கியமாக, பிறருக்கு உதவும் தன்மை உடையவராக இருந்தார். அவரின் மகளுக்கு ஒரு வயது தான் ஆகிறது. மனது வலிக்கிறது. அவரின் மனைவி, குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்.

விசாகா சிங் : கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த நினைவுகள் ஏராளம். இதை எழுதும்போது கவலையும், அதிரிச்சியுமாக உள்ளது. உங்களின் குடும்பத்தாருக்கு கடவுள் தெம்பை அளிக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.


79 thoughts on “கடவுளுக்கு இரக்கம் இல்லை – நடிகர்கள் சேதுராமனின் மறைவுக்கு இரங்கல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/