2004 டிசம்பர் 26 – மறக்க முடியாத சுனாமி ஆழிப்பேரலை! – வீடியோ
சுனாமி ஆழிப்பேரலை தாக்கி லட்சக்கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கிய சோக தினத்தின் 15ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
கடலோர மக்களுக்கு அலைகள் புதிதல்ல. அன்று வந்த அலையையும் சாதாரணமாகவே நினைத்தனர். ஆனால், லட்சக்கணக்கான மக்களின் உயிரைப் பறிக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக அன்று வந்த சுனாமி அலைகள் சுமார் 30 மீட்டர் (100 அடி) உயரத்துக்கு எழுந்தன.
சென்னை, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி மாவட்டங்கள். இதேபோல், கடலூர், பாண்டிச்சேரி எனச் சென்னை முதல் குமரி வரை கடலோரத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சூறையாடிச் சென்றது.
அன்று நடந்த அந்த கோர தாண்டவத்தின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் உங்களுக்காக