நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு இல்லை – மேனேஜர் வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விக்ரமுக்கு திடீர் உடல் நலக்குறைவுக்கு ஏற்பட்டுள்ளது. சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விக்ரமுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியானது.

கடந்த சில மணி நேரங்களாகவே தமிழ் திரையுலகம் மிகுந்த பரபரப்பில் இருக்கிறது. இதற்கு காரணம் நடிகர் விக்ரம் திடீரென உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தான். அவரின் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இன்று அந்த படத்தின் டீசர் மிகவும் பிரம்மாண்டமாக வெளியிடப்பட இருக்கிறது. அதற்காக ஒட்டுமொத்த ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் விக்ரமின் உடல்நிலை குறித்து வெளிவந்த இந்த செய்தி பலரையும் பதட்டம் அடைய வைத்துள்ளது.

இன்று அவர் அந்த விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விக்ரம் மாரடைப்பின் காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு இல்லை:தவறான தகவலை பரப்ப வேண்டாம் அவரது மேலாளர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதால் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். விக்ரம் நலமுடன் உள்ளார். விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என்றும் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.


Tag: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published.