துப்பாக்கி சூட்டில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழப்பு

துப்பாக்கி சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்தார். அந்நாட்டின் நாரா என்ற பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இன்று அதிகாலை துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த ஷின்சோ அபே, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

67 வயதான ஷின்சோ அபே ஜப்பான் நாட்டில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமையை கொண்டுள்ளார். முதன்முதலாக 2006ஆம் ஆண்டு பிரதமராக தேர்வான அவர், உடல் நலக்குறைவு காரணமாக ஓராண்டிலேயே பதவி விலகினார்.பின்னர், 2012ஆம் ஆண்டில் மீண்டும் பிரதமராக தேர்வான அவர் 2020ஆம் ஆண்டு வரை இப்பதவியில் தொடர்ந்தார். இந்நிலையில்,2020ஆம் கோவிட் பெருந்தொற்று பரவல் ஏற்பட்ட நிலையில், தனது உடல்நிலையை காரணம் காட்டி பதவி விலகினார் ஷின்சோ அபே.

ஷின்சோ அபேவின் மரணத்தையடுத்து பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Comments are closed.

https://newstamil.in/